வசந்தி தேவி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

மூத்த கல்வியாளரும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகள் குறித்து வசந்திதேவி மிகத் தீவிரமான பரப்புரையை மேற்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வியில் மதவாதம், வணிகம், மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு ஆகியவற்றுக்கு எதிராக வசந்திதேவி தொடர்ந்து பேசி வந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள செய்தியில், தமிழ்நாட்டில் கல்விச் சீர்திருத்தம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்காகப் போராடியவர்களில் வசந்தி தேவி குறிப்பிடத்தக்கவர் எனத் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கல்வி சார்ந்த கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் அவர் பங்கேற்றதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *