
முதலில் நெல்லை-செங்கோட்டை வரை மட்டுமே இயங்கி வந்த ரயில் சேவை தற்போது ஈரோடு-நெல்லை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையானது தற்போது நிறைவேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நெல்லை – ஈரோடு வழித்தடத்தில் விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரயிலும், தாம்பரம், மேட்டுப்பாளையம் வாரம் ஒருமுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஈரோடு- நெல்லை விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு-நெல்லை விரைவு ரயில் 16845 சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்குண்டான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதாவது ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 11.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்படும் ரயில் (16846) ஈரோட்டை மதியம் 3 மணிக்கு சேரும் எனவும் ட அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பினால் அப்பகுதி மக்கள் , தங்கள் கோரிக்கை நிறைவேறியதால் மிக்க மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

