இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

Advertisements

ரஷியா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக 50 சதவீதத்திற்கும் மேல் டிரம்ப் வரி விதித்துள்ளார். இந்நிலையில், ரஷியா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவை மீண்டும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  செய்தியாளர்களிடம் பேசியபோது, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் விவகாரத்தில்  இந்தியா தங்களுக்கு உதவவில்லை என்றால் வரியை  இன்னும் அதிகரிப்போம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தன்னை மகிழ்ச்சிப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் ரஷ்யாவிடம் தொடர்நது வர்த்தகம் செய்தால், விரைவில் அவர்கள் மீது வரியை உயர்த்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *