
தந்தை பெரியார்குறித்த அநாகரிக பேச்சிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுவரை ஆதாரம் அளிக்காததால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே அறிவித்தப்படி சீமான் வீட்டைப் பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். காவல் துறையினர் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் செல்ல முயன்றனர்.
மேலும், சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற பெரியாரிய உணர்வாளர்களைப் போலீசார் கைது செய்தனர்.
சீமானுக்கு எதிராகப் போராடிய 878 பேர்மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
