
மராட்டியத்தின் மும்பை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தின் மும்பை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கத்கோபர் பகுதியில் சிராக் நகர் என்ற இடத்திற்கு உட்பட்ட கவுசியா சாவ்ல் என்ற குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், மலையடிவாரத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், அதன் மண் மற்றும் இடிபாடுகள் அருகில் இருந்த 5 முதல் 6 வீடுகளின் மீது விழுந்தன. இதுபற்றிய தகவல் அறிந்து மும்பை தீயணைப்பு படையினர், காவல்துறையிரன், மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இதில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த சூழலில், மும்பையில் நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.



