தேசிய விருது பெற்றுள்ள பார்க்கிங் படத்தின் இயக்குநர்..

தேசிய விருது பெற்றுள்ள பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கும், சிறந்த இசை அமைப்பாளர் விருதை வென்றுள்ள ஜிவி பிரகாஷ் குமாருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரை உலகில் தனி இடம் பிடித்திருக்கும் திரு.ஷாருக்கான் அவர்களுக்கு ஜவான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *