தமிழகக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது!

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஆகஸ்டு 13, 14 ஆகிய நாட்களில் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கடலூர் மாவட்டம் மரூரில் 9 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *