Advertisements

திருவண்ணாமலையில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ‘மினி டைடல் பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை, மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகம் ஆகியவற்றில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 புதிய நிருவாகக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளார்.
சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் அழகுபடுத்தப்பட்ட பூங்கா, வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்களில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் முடிந்ததைத் தொடக்கி வைத்துள்ளார்.
தேசியக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் விருதுபெற்ற தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, அரூர், சுப்பிரமணிய சிவா கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் இலாபப் பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 இலட்ச ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
Advertisements

