நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தவர் விஜய்..!

Advertisements
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிற விஜய் திமுகவிற்கு சவால் விடுவது எப்படி இருக்கிறது என்றால், படை அரிமாவை அணில் எதிர்பதற்கு சமம் என்று சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், நகராட்சி திடலில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன் நாகநாதன், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கூட்டத்தில்  சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் பேசிய போது, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிற விஜய் திமுகவிற்கு சவால் விடுவது எப்படி இருக்கிறது என்றால், படை அரிமாவை அணில் எதிர்பதற்கு சமம் என்று விமர்சித்தார்.
தொடர்ந்து, முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாக விஜய் உள்ளாகதாகவும், 41 உயிர்களை கொண்றுவிட்டு ஆட்டம் போட்டு கொண்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் எதிர்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அன்புமணிக்கும், விஜய்க்கும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேச தகுதியில்லை என தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *