இத்தாலியும் தானும்  எதற்கும் கெஞ்சமாட்டோம் – டிரம்ப்புக்கு பதிலடி தந்த மெலோனி.!

Advertisements

இத்தாலியும் தானும்  எதற்கும் கெஞ்சமாட்டோம் என இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது, பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டி கெஞ்சியதாக கூறியிருந்தார். இத்தாலி பிரதமர் குறித்த டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டிரம்ப்பின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அமெரிக்க பயணத்தை இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானி ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக இத்தாலி பிரதமர் மெலோனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்சமாட்டோம் என்று கூறினார். அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்கள் முற்றிலும் புனையப்பட்டவை என்றும் தான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தனது நட்பு நாடுகளுடன் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என தனக்குத் தெரியவில்லை என்றும் இது போல அவர் பலமுறை நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *