
திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளை த.வெ.க அரசும் சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலத்தைச் சேர்ந்த கோபிகா, தேர்வு அச்சத்தில் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த கோபிகாவின் பெற்றோருக்கு தன் இரங்கலை கூறினார். மோசடியான நீட் தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் – சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்..



