கரூரில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று இளைஞர்களுக்கு உபகரணங்களை வழங்கினர். இதையடுத்து, விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்ட இளைஞர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனர்.



