அண்ணா அறிவாலயத்தில் அரசியல் திருப்பம்..!

தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களான தனது மகன் ரவிந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோருடன் வந்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதன் பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர்  தாய் கழகத்தின் மனமகிழ்ச்சியுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார் என்றும் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும் என்றார். தனக்கு எந்த அச்சுறுத்தலும், கட்டாயமும் இல்லை என்றும் சுயமாக சிந்தித்து முடிவு எடுத்து தி.மு.க.வில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன் என்றார். இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *