தமிழ்நாட்டைத் திசைதிருப்பச் சதி நடக்கிறது..!

Advertisements

தமிழர்களின் பண்பாட்டினை சீர்குலைப்பவர்களுக்கும், பெண்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு எதிராக எப்போதும்  திமுக ஒரு தீய சக்தி தான் என சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் நகராட்சி திடலில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் மற்றும் ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன்  மேடையில் பேசியபோது, மத அடிப்படையில் அரசியல் செய்பவர்கள், தமிழர்களின் பண்பாட்டினை சீர்குலைப்பவர்களுக்கும், பெண்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு எதிராக  எப்போதும் திமுக தீய சக்தி தான் என்று கூறினார்.

தமிழர்களில் சுயமரியாதையை நிலைநிறுத்திய தலைவரின் அண்ணா பெயரை வைத்துகொண்டு பாஜக என்கிற கட்சிக்கு சென்று அடிமையாகி, அமித்ஷா ஆதிமுகவாக மாறி வருகிறது என விமர்சித்தார். தமிழ்நாட்டினை திசை திருப்ப சதி வேலை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *