“ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்” – உதயநிதி சவால்!

முந்தைய திமுக ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்னிர். அப்போது, தனது மேசையில் உள்ள கோப்புகளைத் திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என்று முதலமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சோதிடர் சொன்னால்தான் திறப்பீர்களா? என்று வினவியதுடன், இந்த உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் தாங்கள் அஞ்சமாட்டோம் என்று கூறினார்.

ஆளுங்கட்சியினர் முந்தைய திமுக ஆட்சியின் மீது ஆதாரம் இல்லாமல் குற்றஞ் சாட்டுவதாகவும், சட்டப்பேரவையில் பாட்டெல்லாம் பாடுவதாகவும் கூறினார். சட்டப்பேரவையின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய கருத்துக்கள் எல்லாம் ரீல்சாக வெளியாகிப் பரவி வருவதாகவும் உதயநிதி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *