
திருவாண்டார்கோவில் அரசுப் பள்ளி அருகில் மாணவர்களைக் குறி வைத்துக் கஞ்சா விற்பனை செய்த 2 பேரைப் போலீசார் கைது, மோட்டார் சைக்கிள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல், செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
புதுச்சேரி மாநில அளவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கஞ்சா வரத்து அதிகமாக உள்ளது. இதனை விற்பனை செய்ய இளைஞர்கள் ஒன்றாக இணைந்து பள்ளி கல்லூரி மாணவர்களை ஆரம்ப போதைக்கு அடிமையாக்க கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகின்றது.
புதுச்சேரி மாநில அளவில் அரசுப் பள்ளி கூட மாணவர்களைக் குறி வைத்து விற்பனை செய்யப்படும் இந்தக் கும்பல் படிக்காமல் பள்ளியையும், வீட்டினையும் ஏமாற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி சுற்று மாணவர்கள், சிறு வயது முதல் கூலி வேலை செய்யும் இளைஞர்கள், ஆகியோரை குறி வைத்துக் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநில அளவில் காவல்துறை கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்கி வந்தாலும் எங்கோ ஒரு இடத்தில் பட்டம்போல் பறக்கின்றது கஞ்சா விற்பனை.
புதுச்சேரி மேற்கு பிரிவு எஸ்.பி. வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் திருபுவனை போலீசார் திருவண்டார் கோவில் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் குற்றவியல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் அப்பொழுது பள்ளியின் அருகிலிருந்து போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் போலீசார் பதிவுகள் செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் திருவாண்டார்கோவில் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த கண்ணாயிரத்தின் மகன் செந்தில்குமார் 30, மற்றும் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கால்நடை மருத்துவமனை தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சூரியன் 24, என்பது தெரியவந்தது, கடந்த சில மாதங்களாக வேலையில்லாத காரணத்தினால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களிடமிருந்து 1 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தார்கள்.

