ஜப்பானில் ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கு தலா 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இவர்கள்து சாதனையை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் தலா 30 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவ்வீரர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று, சர்வதேச அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைத்திட தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


