Advertisements

தம்பி அண்ணாமலைக்குக் கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக தாங்கள் துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைத்தளப் பதிவில், மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரையின்போது, பாஜகவின் முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம் என்று பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். இதை ஏற்பதும், எதிர்ப்பதும் அவரவரின் சனநாயக உரிமை.
ஆனால், மும்பைக்கு வந்தால் தம்பி அண்ணாமலையின் கால்களை வெட்டுவேன் என்பதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியது என்றார். பின்னர், ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு தம்பி அண்ணாமலை என்ற தனியொருவரை மட்டும் அவமதிப்பதல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும் என்று கூறினார். மேலும், தம்பி அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக தாங்கள் துணை நிற்போம் என தெரிவித்தார்.
Advertisements


