“வீரமணி போக்சோ வழக்கில் மேலும் ஒருவர் கைது: வலை விரிக்கும் மத்திய குற்றப்பிரிவு.!

சென்னை தொழிலதிபரான ஜெம் குரூப் நிறுவனர் ஆர். வீரமணி மீது தொடரப்பட்டுள்ள போக்சோ பாலியல் வழக்கு விவகாரத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான ஜெம் வீரமணி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான கணேசன், தொழிலதிபர் வீரமணியிடம் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்த ஊழியர் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெம் வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், வழக்கில் தொடர்புடைய சான்றுகளை மறைக்க முயன்றதாகவும் கணேசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரிடம் தீவிர விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள்,

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமிகள் பாதிக்கப்பட்ட இந்த அதிர்ச்சி அளிக்கும் வழக்கில், மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாகச் செயல்பட்ட இடைத்தரகர்கள் மீது எவ்விதத் தாட்சண்யமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் காவல்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *