வார இறுதி நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 1,739 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

வார இறுதி நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 1,739 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 570 பேருந்துகளும், நாளை 605 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 100 பேருந்துகளும், நாளை 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

மாதவரத்தில் இருந்து 16-ந் தேதி 24 பேருந்துகளும், நாளை 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *