NTA நெட் தேர்வு குழப்பம்: மாணவர்களைத் தண்டிப்பதா? ராகுல் காந்தி ஆவேசம்.!

தேசிய முகமை நடத்திய நெட் தேர்வில் 3 பாடங்கள் ரத்து செய்துள்ளதால் மாணவர்கள் தண்டனை அனுபவிப்பதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமூகவியல், ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான நெட் தேர்வுகள் ஜூன் 22 முதல் 30 வரை நடைபெற்ற நிலையில் தவறான வினாத்தாள், பழைய கேள்விகளையே மீண்டும் கேட்டதாலும் அந்த மூன்று தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை ரத்து செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பல ஆண்டுகளாகத் தயாரான  ஆயிரக்கணக்கான தேர்வர்கள், இப்போது செப்டம்பர் மாதத்தில் இவை அனைத்தையும் மீண்டும் தேர்வு எழுத வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தவறு செய்வது என்டிஏ, ஆனால் தண்டனையை அனுபவிப்பது மாணவர்கள் என்று தெரிவத்துள்ளார். பாஜக அரசின் மற்ற எல்லா அமைப்புகளைப் போலவே, என்டிஏவும் ஒருபோதும் அது தங்கள் தவறு என்று ஒப்புக்கொள்வதில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து என்டிஏவின் தலைமை நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் உழைப்பு திருடப்படுகின்றன என்றும் இதற்குப் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *