10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி.!

Advertisements

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுப் பெற்றுள்ளனர். 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள், 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று, நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். இன்று காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்ச்சி விகிதம் – 93.80 சதவீதம் ஆகும். இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், இன்று மதியம் 2 மணிக்கு பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *