வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசனைக் கூட்டம்..!

சென்னையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

சென்னை, தியாகராய நகரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த, கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தலைவர்களையும் அழைக்கும்படி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, கூட்டணியில் இல்லாத தவெக தலைவர் விஜய், அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற கேள்விற்கு இன்றைய கூட்டத்தில் பதில் தெரிய வரும். இதனால், இன்றைய கூட்டத்தில் யார், யார் பங்கேற்க போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *