6 மாதத்தில் திருமாஅணி மாறுவாரா? தமிழிசை கேள்வி !

சென்னை:

6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? எனப் பா.ஜ.க, மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சமீப நாட்களாக, தி.மு.க., வுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். தி.மு.க., வும் வி.சி., யும் ஒரே கூட்டணில் நீடிக்கும் நிலையில், இவருடைய தன்னிச்சையான செயல்பாடுகளால், தி.மு.க., வுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

தி.மு.க., தலைமையைக் கடுமையாக விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை, கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். இதுகுறித்து இன்று(டிச.,10) சமூகவலைதளத்தில் தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது,

ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடை நீக்கம் எனத் திருமாவளவன் அறிவித்துள்ளது. 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? எனத் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *