இந்தியாவுக்கு தொடர்ந்து சிக்கல்!  டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!!

வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமரும், ராணுவ தளபதியும் சந்தித்து பேசியதால் இந்தியாவுக்கு தொடர்ந்து சிக்கல் உண்டாகிவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிய நிலையில், இதனை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான வரிகளை விதித்தார். இதனால், இரு நாடுகளின் உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பில் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டனர் எனக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *