தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம்..? தீவிர ஆலோசனையில் விஜய் மற்றும் கட்சியினர்..!

வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக கட்சி கூட்டணி , தேர்தல் வாக்குறுதிகள் , கட்சியின் நிலைப்பாடு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொது சின்னம் கோரும் அரசியல் கட்சிகள் வரும் நவம்பர் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்வு செய்வதற்கு 190 சின்னங்களையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.சின்னம் தேர்வு குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *