Advertisements

கடந்த தேர்தலில் திமுகவின் கோட்டையாகத் திகழ்ந்த சென்னை மண்டலத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற பரபரப்பு சர்வே வெளியாகி உள்ளது .2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. தேர்தல் களம் இப்பொழுதே உச்சகட்ட சூடு பிடித்து விட்டது .திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் தவெக விசிக மதிமுக தேமுதிக பாமக நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே தனித் தனி திட்டங்களை வகுத்து தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார்கள் .இருந்த போதிலும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது கூட்டணி குழப்பங்கள் பெரிய அளவில் நிலவி வருகின்றன.வருகிற தேர்தலில் கூட்டணியை பொறுத்து தான் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படும் என்கிற சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே சில தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன அவை அனைத்துமே திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளன இரண்டாவது கட்டமாக அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன .இருந்த போதிலும் வெற்றி வாய்ப்பு என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சிறிய இடைவெளியில்தான் இருக்கிறது என்றும் அந்த கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன .தமிழகத்தில் புதிதாக எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் என்பதும் கருத்துக்கணிப்பாக இருக்கிறது
இந்த சூழ்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நிலவி வந்த நிலைமை வேறு தற்பொழுது நிலைமை வேராக இருப்பதாக சொல்லப்படுகிறது .சென்னையைப் பொறுத்தவரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 16 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்று சென்னை தங்களது கோட்டை என்று பறைசாற்றியது
ஆனால் இந்த முறை சென்னை கோட்டையில் திமுகவுக்கு மிகப்பெரிய ஓட்டை விழுந்து விட்டதாக புதிய கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது .சென்னை மண்டலத்தில் அண்ணா நகர் சேப்பாக்கம் ஆர் கே நகர் எழும்பூர் துறைமுகம் கொளத்தூர் மயிலாப்பூர் பெரம்பூர் ராயபுரம் சைதாப்பேட்டை திருவிக நகர் உள்ளிட்ட 16 தொகுதிகள் இருக்கின்றன.தலைநகர் சென்னையைப் பொறுத்த வரையில் அனைத்து கட்சிகளுக்குமே வாக்கு வங்கிகள் பெருமளவில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த சூழ்நிலையில் சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் மட்டுமே திமுக மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது
அந்த வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெறும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு போட்டியிட்ட துறைமுகம் தொகுதியிலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் போட்டியிட்ட சைதை தொகுதியிலும் மீண்டும் திமுகவே கைப்பற்றும் .இதனைத் தொடர்ந்து பெரம்பூர் எழும்பூர் வில்லிவாக்கம் திருவிக நகர் உள்ளிட்ட எட்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது .இதேபோல் அதிமுகவை பொருத்தவரையில் ஐந்து தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது அந்த வகையில் ராயபுரம் தொகுதியில் அதிமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது ஆனால் அதே சமயத்தில் அங்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிட்டால்தான் அதிமுக வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கிறது இதனை தொடர்ந்து வேளச்சேரி விருகம்பாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது
தி நகர் மைலாப்பூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக சார்பில் போட்டியிட்டால் அங்கும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது .இது அல்லாமல் அண்ணா நகர் ஆயிரம் விளக்கு ஆர் கே நகர் ஆகிய தொகுதிகள் இழுபறியில் இருக்கின்றன . அதிமுகவை பொருத்த வரையில் மிகத் தீவிரமான தேர்தல் வியூகத்தை அமைத்தால் இந்த தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது .இது தவிர மூன்று தொகுதிகளில் இதர கட்சிகள் வெற்றி பெறலாம் என்றும் தெரியவந்துள்ளது
சென்னையைப் பொறுத்தவரையில் அதிமுக பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இவர்கள் தீவிரமாக வேலை செய்தால் நிச்சயமாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் எட்டு தொகுதியை கைப்பற்றி விடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது .அதேசமயம் திமுகவும் தனது தேர்தல் வியூகத்தை புதிதாக அமைத்து தீவிரமாக களம் கண்டால் பத்து தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பாக இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் நடிகர் விஜய் தனித்துப் போட்டியிட்டால் சென்னை மண்டலத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது என்றும் அதேபோல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் வகையில் ஒரு தொகுதி கூட அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது
Advertisements



