U.S. heat :10 கோடி பேரைக் கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம்!

10 கோடி பேரை வெப்ப அலை தாக்கும் என பொதுமக்களுக்கு  அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவித்தனர்.
அமெரிக்காவில் காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக உள்ளது.  இதனால் பனிப்பாறை  உருகி கடல் மட்டம் உயர்தல்,வெப்ப அலை வீசுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் வட கரோலினாவில் 113 டிகிரியும் , வாஷிங்டனில் 109 டிகிரியும் வெயில் கொளுத்தி மக்களை வாட்டி வதைக்கிறது.
மேலும் அங்கு 10 கோடி பேரை  கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருக்கும்  என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *