
கோவை:
கோவை ஆர்எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச ஹாக்கி மைதானம் பணிகள் துவங்கப்பட உள்ளது. அதைத் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தை விளையாட்டு தலைநகராக்கும் வகையில் விளையாட்டுத் துறை அமைச்சர் செயல்பட்டு வருகின்றார். ஹாக்கி வீரர்கள் கோரிக்கை ஏற்று ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். கோவையின் வளர்ச்சிக்காக ரூ.200 கோடி ரூபாயினை முதல்வர் அறிவித்துள்ளார்.


