பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செப்டம்பரில் அமல்..!

Advertisements
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் . முன்னதாக ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிறைவேறவில்லை
இந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது . பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்களுக்கு கடைசி  ஊதியத்தில் பாதி சம்பளத்தை ஓய்வூதியமாக வழங்குவது தான் பழைய ஓய்வூதிய திட்டம் மேலும் பண வீக்கத்திற்கு தகுந்தபடி ஓய்வூதிய உயர்வும் கிடைத்து வந்தது .
தற்பொழுது உள்ள புதிய என் பி எஸ் என்ற திட்டம் பங்களிப்பு அடிப்படையிலானது அதாவது ஊழியர்கள் மற்றும் அரசு இருவரும் பங்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த 2023 ஆம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது இந்தியா முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில் பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர் .
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் புதிய ஓய்வு திட்டம் தான் நடைமுறையில் இருந்து வருகிறது
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம் என திமுக தரப்பில் தேர்தல் வாக்குறுதி தரப்பட்டது .
இருந்தபோதிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து 4  ஆண்டுகள் ஆகிவிட்டன இன்னமும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை . இதனைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர்கள் அமைப்பு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் . இதற்கிடையே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி சுகன் தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது அந்த குழு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது
இதற்கிடையே அரசு ஊழியர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செப்டம்பர் மாதத்துக்குள் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கூறியிருந்தார் . அவர் சொன்னபடியே வருகிற செப்டம்பர் மாதம் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அரசு ஆணை வெளிவர காத்திருக்கிறது என்பது தான் இப்போதைய மகிழ்ச்சியான செய்தியாகும்
இது தொடர்பாக அரசு அமைத்த குழு பல்வேறு ஆய்வுகள் மற்றும் தரவுகளை சேகரித்து இது தொடர்பான அறிக்கையை நிறைவு செய்து விட்டதாக கூறப்படுகிறது விரைவில் இந்த அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளிவருகிறது
திமுக அரசை பொருத்த வரையில் ஆண்டாண்டு காலமாக அரசு ஊழியர்கள் திமுகவை ஆதரித்து வருகிறார்கள் அந்த வகையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களின் ஓட்டுகளை பெற வேண்டும் என்பதை திரை மறைவாக மனதில் வைத்து தற்போது இந்த திட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது . வருகிற ஆகஸ்ட் மாதம் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்கிற தகவலை தலைமைச் செயலகத்திலிருந்து தெரிவித்துள்ளனர் . இதன் மூலம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை தற்பொழுது நிறைவேற போகிறது என்பது மிக்க மகிழ்ச்சியான செய்தியாகும் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *