அறநிலையத்துறை அமைச்சர் மீது சேகர்பாபு குற்றச்சாட்டு..!

அறநிலையத்துறை அமைச்சர் தொடர்ந்து ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைக் கூறி வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரைகுறையாகத் தெரிந்துகொண்ட ஒருவர், திமுக ஆட்சியைத் ‘தூங்குகின்ற ஆட்சி’ என்று கூறினார். ஆனால், திமுக தூக்கத்தைத் தொலைத்து ஆட்சி செய்ததால்தான் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடர்ந்து ஏதேனும் ஒரு குற்றச்சாட்டைக் கூறி வருவதாகவும், அவர் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், அறநிலையத்துறை அமைச்சர் கோவில்களுக்குச் சென்று ஆய்வு செய்கிறாரே தவிர, இறைவனைத் தரிசனம் செய்வதில்லை என்றும், கோபுரத்தைப் பார்வையிடும்போது ஷூ அணிந்துகொண்டு பார்வையிடுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *