அரசியலைக் கடந்த மரியாதை.. பி.டி.ஆர் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்ற CM விஜய்..!

தென் மாவட்டப் பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சென்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்திற்கு வருகை தந்த அவருக்கு, கோவில் அறங்காவலரும் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி அவர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

வயதில் மூத்த பெண்மணியான ருக்மணி அம்மாள் தனக்கு வரவேற்பு அளித்ததும், சற்றும் தாமதிக்காமல் அவரது காலில் விழுந்து வணங்கி விஜய் ஆசி பெற்றார். எதிர்பார்க்காத இந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட ருக்மணி அம்மாள், விஜய்யின் தலையைத் தொட்டு மனதார ஆசி வழங்கினார்.

தொடர்ந்து கோவில் கருவறையில் சிறப்பு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்த விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மூத்த தலைமுறையினருக்கு விஜய் அளித்த இந்த மரியாதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *