யேமனில் மீண்டும் தீவிரமடையும் போர்: சவுதி தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு.!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மாகாணம் மீது சவுதி அரேபி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா – ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மாகாணம் மீது சவுதி அரேபியாவுடன் இணைந்து அரசுப்படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இந்த வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் படுகாயமடைந்தனர். இதனால், மீண்டும் ஹவுதி – சவுதி இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *