வரலாறு காணாத கனமழை: இடுப்பளவு வெள்ளத்தில் மூழ்கியது பாங்காக்!

தாய்லாந்து தலைநகர் பாங்காகில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரம் முழுவதும் இடுப்பளவுக்கு மேல் நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இதனையடுத்து, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பாங்காகின் அனைத்து 50 மாவட்டங்களையும் ‘பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக’ தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

முக்கியச் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *