விவசாயிகளை ஏமாற்றும் தவெக அரசு! – MRK பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்.!

புதிய ஆட்சியில் அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தவெக அரசு கிள்ளி தருவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது, பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை என்றும் ஏமாற்றம் தான் மிஞ்சியது என்றும் கூறினார். கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள் என்று தெரிவித்தார். தங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருந்ததாகவும் தற்போது தவெக ஆட்சியில் ரிலாக்ஸாக உள்ளதாக விமர்த்தார். புதிய ஆட்சியில் அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு கிள்ளி தருவதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து வேளாண்த்துறை அமைச்சர் வினோத் பேசியபோது, விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது என்றும் திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், கரும்பிற்கு 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு உயர்த்தி தரவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு நான்காயிரம் ரூபாய் கொடுப்போம் என கூறி இருந்ததாகத் தெரிவித்தார். திமுக ஆட்சியில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *