மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டியில் வங்கதேசம் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது.
இதில், அதிகப்பட்சமாக சோபனா மோஸ்தரி 34 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய ஹர்ஷிதா சமரவிக்ரம 48 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம், இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.


