ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் எப்போ ரிலீஸ் தெரியுமா.?

பிரபல நடிகர் ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் ஆர்யா, நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, அவர் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மனு ஆனந்த், இயக்கத்தில் திபு நிணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதில், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா, கவுதம் ராம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகி வருகிறது. இதையடுத்து, இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ஆர்யாவின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *