
தமிழக அரசியலில் கூட்டணி வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் புதிய கட்சி தொடங்கி விடலாமா என ஓ பன்னீர்செல்வம் ஆலோசனைகள் நடத்தி வருவதாக தெரிகிறது . கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் அணி இப்பொழுது நிராயுதபாணியாக நிற்கிறது. சமீபத்தில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமீத்சாவிடம் ஓ பன்னீர்செல்வம் உங்கள் கூட்டணியில் இருக்கிறாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அது அதிமுகவின் முடிவு என்று கூறிவிட்டுப் போய்விட்டார். இது மட்டுமல்லாமல் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவும் இல்லை
இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் நாங்கள் கூட்டணியில் நீடிக்கிறோம் என்று ஓபிஎஸ் கூறிவரும் நிலையில் தற்பொழுது புதிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் ஓ பன்னீர் செல்வத்தை கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓ பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுடன் புதிதாக ஆலோசனைகள் நடத்தி வருகிறார்
கட்சியின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசியல் கட்சி தொடங்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வருகிற ஜூலை 7ஆம் தேதி அழைத்து அன்றைய தினம் முக்கிய முடிவை எடுப்பதாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது
அன்றைய தினம் புதிதாக கட்சி ஆரம்பிப்பது குறித்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசியலில் கூட்டணி வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் புதிய கட்சி தொடங்கி விடலாமா என ஓ பன்னீர்செல்வம் ஆலோசனைகள் நடத்தி வருவதாக தெரிகிறது
கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் அணி இப்பொழுது நிராயுதபாணியாக நிற்கிறது. சமீபத்தில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமீத்சாவிடம் ஓ பன்னீர்செல்வம் உங்கள் கூட்டணியில் இருக்கிறாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அது அதிமுகவின் முடிவு என்று கூறிவிட்டுப் போய்விட்டார். இது மட்டுமல்லாமல் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவும் இல்லை
இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் நாங்கள் கூட்டணியில் நீடிக்கிறோம் என்று ஓபிஎஸ் கூறிவரும் நிலையில் தற்பொழுது புதிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் ஓ பன்னீர் செல்வத்தை கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓ பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுடன் புதிதாக ஆலோசனைகள் நடத்தி வருகிறார்
கட்சியின் மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அரசியல் கட்சி தொடங்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர் . இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வருகிற ஜூலை 7ஆம் தேதி அழைத்து அன்றைய தினம் முக்கிய முடிவை எடுப்பதாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.



