
தனியாக செல்ல மாட்டேன்…
தம்பிகளே வாங்க…
துணைக்கு அழைத்த சீமான்…
கடந்த இரு வாரங்களாக ஒரே சீமான் டாக்.. தான்.. தேமே என்று தானுண்டு தன் வேலையுண்டு என்று ..அரசியலில் முழுமூச்சாக சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டிருந்த நம் அண்ணன் செந்தமிழர் சீமான் மீது சேற்றை வாரி இறைத்து , குட்டையை குழப்பி, தமிழ் மீடியாக்களையே ஒரு கலக்கு கலக்கி , மக்களாகிய நம்மையும் ஒரே டென்சன் ல வச்சிருந்தான்க ,ஒரு லட்சுமி , இல்ல இல்ல ரெண்டு லட்சுமி…
சீமான் மீது பேட்டி மூலமாக அக்கப் போர் நடந்தது.
என்னென்னவோ நடந்து, கடைசியாக ஒரு வழியா நானு தோத்துட்டேன்.. சீமான் பவர்புல்,, சீமான் சார்,, அப்படின்னு சரண்டர் ஆன மேட்டரும் நமக்கு , ஒரு சின்னக் குழந்தைக்கு கூடத் தெரியும்…சரிப்பா ஒரு வழியா மழை விட்டதுன்னு பார்த்தா..
மழை விட்டது சாரல் விடவில்லை… ஆமா.. கோர்ட்டில் ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கேஸ் கொடுத்த விஜி அம்மா..ஹாயாக பெங்களுரு கிளம்பி போயிடுச்சி..
இருந்தாலும் , நேர்மையாக சீமான்,நான் ஆஜராகியே தீருவேன் என்று கிளம்பிவிட்டார் வளசரவாக்கம் கோர்ட்டுக்கு, அதுவும் தன் மனைவியுடன்.
தனியாகவா போனார். அதுதான் இல்ல.. தம்பிகள் புடைஅடு சூழ வந்தாரே பார்க்கலாம். ஒரே தள்ளுமுள்ளு… அது எப்படி இவ்ளோ பேர் வந்துட்டாங்க. நம்ம சீமான் அண்ணன் நேத்து ராத்திரியே தம்பிகளை அழைத்து ஒரு ஆடியோ போட்டு வாட்ஸப்பில் தட்டி விட்டாரு.
அண்ணன் சொல் மிக்க மந்திரம் இல்லை . அவ்ளோ தான் வளசரவாக்கம் ஸ்தம்பிக்குது,, தம்பிகள்தலைகளால் திணருது,,
தம்பிகள் உடையான் படைக்கு அஞ்சான்…


