ஈரோடு கிழக்கு தொகுதியில் 2வது நாளாகத் தி.மு.கவினர் வீடு வீடாகச் சென்று பிரசாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.கச்சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க-பா.ஜ.கத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் தி.மு.க. வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

பெரியார் நகர் பகுதி, கள்ளுக்கடை மேடு, ஓடைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தனர். அதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாகக் காலை 7 மணிக்குத் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இன்றும் எஸ்.கே.சி ரோடு, மாமலை வீதி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனத் தி.மு.க.வினர் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *