Chennai Story Movie:சமந்தாவை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல்..!எந்தபடத்தில் தெரியுமா?

Advertisements

சென்னை: சமந்தாவை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் ‘சென்னை ஸ்டோரி’ படத்திலிருந்து விலகினார். இதையடுத்து விரைவில் படத்தின் புதிய நாயகிகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி (Timeri N.Murari) எழுதிய ‘அரேஞ்மென்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலப் படமொன்று உருவாகிறது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘சென்னை ஸ்டோரி’ என்று தலைப்பிட்டு பணிகளைத் தொடங்கினார்கள். இதனை பாஃப்டா விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக முதலில் சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். அதற்குப் பிறகு தேதிகள் பிரச்சினையால் படத்திலிருந்து விலகினார்.

பின்பு அவருக்குப் பதிலாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். தற்போது தேதிகள் பிரச்சினையை முன்வைத்து ஸ்ருதிஹாசனும் படத்திலிருந்து விலகியிருக்கிறார். நாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும். ’சென்னை ஸ்டோரி’ மட்டுமன்றி ஆத்வி சேஷுடன் நடித்து வந்த ‘டாகோயிட்’ படத்திலிருந்தும் ஸ்ருதிஹாசன் விலகியிருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *