போராட்டத்தில் ஈடுபடும் ஈரான் மக்கள் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் மிகக் கடுமையான தாக்குதலை சந்திக்க நேரிடும் என ஈரான் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் தொடரும் பொருளாதார நெருக்கடி,விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தற்போதைய ஆட்சியாளர்களை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஈரான் உயர் தலைவர் அயதுல்லா கமேனி தலைமையிலான அரசு அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது எனக் கூறினார்.
தொடர்ந்து அப்பாவி மக்கள் தேவையின்றி உயிரிழக்கச் செய்தால் பேச்சு வார்த்தைக்கு முன்பாகவே அமேரிக்க ராணுவம் செயலில் இறங்க வேண்டியிருக்கும் என்றார். மேலும், ஈரான் அல்லது அதன் ஆதரவு நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டால், இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை அவர்கள் எதிர்கொள்வர் என்று எச்சரிக்கை விடுத்தார்.


