“தவெக அரசுக்கு கால அவகாசம் தேவை” – துரை வைகோ!

Advertisements

தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என்று மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் கொண்ட மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மின்சாரத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், மின்சார துறையில் உள்ள பல்வேறு இடையூறுகளை நீக்கி, இடையூறுகள் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

கடனை பொறுத்தவரை ஆட்சி ஏற்றபின் நிதி நிலைமை கருத்தில் கொண்டு சிறுகுறு விவசாயிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்ய முடியும் என்பதே உறுதியான நிலை என்று தெரிவித்தார். தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

இனி வருகின்ற காலங்களில் கண்டிப்பாக போதை கலாச்சாரத்தை குற்ற சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *