Smuggling: உள்ளாடையில் மறைத்துத் தங்கம் கடத்தல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி தனது உள்ளாடையில் மறைத்து வைத்துக் கடத்தி வந்த, 96 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு காலை சிங்கப்பூரில்இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்துவைத்து கடத்தி வந்த 96லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறைஅதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பயணியிடம் தொடர் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *