Ganeshotsav: ராஜ கணபதி லால்பக்சா ராஜா வர்ரார்… வர்ரார்…

Advertisements

ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட
ராஜ கம்பீர ராஜ குலதிலக …
ராஜ கணபதி லால்பக்சா ராஜா வர்ரார்… வர்ரார்…

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி. வட மாநிலங்களில் கோலகலமாக 10 நாட்களுக்கு விழா நடக்கும்.

மஹாராஷ்டிராவில் பிரமிக்கத் தக்க வகையில் சிலைகள், வெவ்வேறு வடிவங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரித்துப் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

இப்போது மும்பையில் லால்பக்சா ராஜாவின் கெட்டப் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் வந்தது தான் காரணம் மும்பையில் களைகட்டத் தொடங்கியது கணேஷ் உத்சவம்!

இவர் எப்படி இருப்பார். ராஜ அலங்காரத்தில், லால்பக்சா ராஜாவாக வணங்கப்படும் விநாயகரின் ‘ஐகானிக் சிலை’ தயார் என்றாலே, கணேச உத்சவ் தொடங்கிவிட்டதாக அர்த்தம்.

செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று தொடங்கும் இந்தப் பண்டிகை 28-ம் தேதி அன்று நிறைவடையும். விநாயகரின் சிலையைக் கொண்டு வந்து வீட்டில் அல்லது மண்டபத்தில் அலங்கரித்துப் பூஜை செய்வதுடன் தொடங்கி, பத்தாவது நாள் அன்று நீர்நிலைகளில் கரைக்கும் வைபவத்துடன் முடியும்.

மும்பையில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, கணேஷ் உத்சவ் என்று அழைக்கப்படுகிறது. மும்பை கணேஷ் உத்சவ் பண்டிகைக்கு மிகப்பெரிய ஒரு சிறப்பு இருக்கிறது.

லால்பக்சா ராஜா என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான விநாயகர் சிலையை, பிரபலங்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள், உள்ளூர் வாசிகள், வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் என்று அனைவரும் மிகப்பெரிய வரிசையில் நின்று வணங்கிச் செல்வார்கள்.

வெள்ளிக்கிழமை, வெளியான லால்பக்சா ராஜாவின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ மும்பையில் மூன்று நாட்களுக்கு முன்பே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாகத் தொடங்கி இருப்பதை உணர்த்துகிறது.

லால்பக்சா ராஜா யார்? … பார்க்கலாம் வாங்க…
லால்பாக்சா ராஜா என்பது பிரம்மாண்டமாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையைத் தான் குறிக்கிறது. நாடு முழுவதும், மாநிலங்கள் முழுவதும் விநாயகர் சிலைகள் வீட்டிலும், பொதுவான இடங்களிலும் வெவ்வேறு அளவில், வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டு வந்தாலும், மும்பையில் உள்ள புட்லாபாய் சாவல் என்ற கணேஷ மண்டபத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலை மிகவும் பிரபலமானது.

ஒவ்வொரு ஆண்டும், ஒரு சில நொடிகளாவது இந்த விநாயகர் சிலையைப் பார்த்துவிட மாட்டோமா என்று ஏராளமானோர் மணிக்கணக்காக வரிசையில் நின்று வணங்கிச் செல்வார்கள்.
கோயிலுக்குச் சென்றால் இப்படித்தான் வழிபட வேண்டும்.

மிகவும் விசேஷமான, லால்பாக்சா ராஜா விநாயகரின் வரலாறு 100 ஆண்டுகள் பழமையானவை. 1900 களின் தொடக்கத்தில் பரேல் என்ற இடம் முழுவதுமே டெக்ஸ்டைல் மில்களால் நிரம்பியிருந்தது. ஆனால் 1930களில் தொழில்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் டெக்ஸ்டைல் மில்களை பெரிய அளவில் பாதித்து, அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது. எனவே அங்கு வசித்து வந்த வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பெரும்பாலான மீனவர்கள் தங்களுடைய இஷ்ட தெய்வமான விநாயகரிடம் வேண்டுதல் வைத்தனர்.

அதற்கு அடுத்து அவர்களுக்கென்று நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தின் பெயர் தான் தற்போதைய லால்பாக்சா மார்க்கெட். தங்கள் வேண்டுதலை விநாயகர் தான் நிறைவேற்றி வைத்தார், அவருடைய ஆசியால் தான் நிலம் ஒதுக்கப்பட்டது என்பதை உள்ளூர் மக்கள் தீவிரமாக நம்பினார்கள். அதையொட்டி அவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை விநாயகருக்கு பூஜை செய்ய, கொண்டாட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

லால்பாக்சா மார்க்கெட்டில் லால்பாக்சா ராஜா சர்வஜனிக் கணேச உத்சம் மண்டலம் என்ற ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் பிரம்மாண்டமான விநாயகர், ஒரு சக்கரவர்த்தியாக, லால்பாக் ராஜா என்று ஒவ்வொரு ஆண்டும் வைக்கபப்ட்டு, கணேஷ உத்ஸவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் சிறிய அளவில் கொண்டாடப்பட்டு வந்த லால்பாக்சா ராஜா உத்சவம், ஆண்டுகள் செல்லச் செல்லப் பிரமாண்டமாக மாறியது. அதுமட்டுமில்லாமல் பந்தல் அலங்காரத்துக்கு மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது. நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு பந்தல் அலங்காரம் செய்து வருகிறார்கள்.

கணேச உத்சவ் என்பது விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்ற கொண்டாட்டம் மட்டுமல்லாமல் சமூக சேவைக்காகவும் பிரசித்தி பெற்றது. சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சென்டர் நடத்துவது முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது வரை பல வகையான உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் உறுப்பினர்களில் ஒருவரான ஆனந்த் அம்பானியின் பங்கு இன்றியமையாதது என்று கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

லால்பக்சா ராஜா சர்வஜனிக் கணேஷ உத்சவ் கமிட்டியின் செயலாளரான சுதிர் சீதாராம் சால்வி கூறுகையில், ‘லால்பக்சா ராஜா என்பது கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஒரு மதம் சார்ந்த மற்றும் சமூக ரீதியான இயக்கமாகும்

இங்கிருக்கும் விநாயகரை வணங்கிக் காணிக்கை செலுத்துவது, அடிமட்ட நிலையில் இருக்கும் சமூகத்திற்கு சேர்கிறது என்று மக்கள் தீவிரமாக நம்புகிறார்கள். எனவே இதைக் கொண்டு சேர்ப்பது என்பது எங்களுடைய சமூகக் கடமையாகும். இதில் ஆனந்த் அம்பானி மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒருவர். ஆனந்த் அம்பானி மற்றும் மற்றும் அவருடைய குடும்பத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மண்டளிற்கு வருகை தருவார். நாங்கள் ஒரு படி முன்னேறிச் சென்றால், அவர் அதை முன்னெடுத்துச் செல்வார்’ என்று தெரிவித்தார்.

இந்த அமைப்பிடம் தற்போது ரிலையன்ஸ் பவுண்டேஷன் வழங்கிய 24 டயாலிசிஸ் இயந்திரங்கள் இருக்கின்றன. இந்த உதவிமையம் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்றும், இதற்காக ஆண்டுக்கு ₹4 கோடி செலவாகிறது என்றும் சால்வி தெரிவித்துள்ளார். ருக்ன சகாய நிதி யோஜனா என்பதை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும், ரிலையன்ஸ் பவுண்டேஷன் இதற்கு மிகப்பெரிய தொகையைப் பங்களிப்பதாகவும் இதற்கு அடுத்ததாக டாடா, வாடியா, ஜே ஜே மருத்துவமனைகள், KEM உள்ளிட்டவை உள்ளிட்டவற்றில் நடக்கும் அறுவைசிகிச்சைகளுக்கு இவர்கள் 10% பங்களிப்புதாகவும் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மகாராஷ்டிராவை சுற்றி இருக்கும் ரத்னகிரி, கோலாப்பூர், சத்தாரா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அப்பொழுது ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழியாக அனந்த் அம்பானி உதவிக்கரம் நீட்டினார். ஒவ்வொரு ஆண்டுமே தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த லால்பக்சா ராஜா மண்டலில் பெறப்படும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் எங்கெங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அங்கே வழங்கப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு பெறப்பட்ட நன்கொடைகள், பீகார் வெள்ள நிவாரண நிதிக்கும், கஸ்தூரிபா நிதிக்கும் வழங்கப்பட்டது. அதேபோல 1962 – 65 ஆம் ஆண்டுகளில் போர் நடந்தபோது, இவர்கள் நிதி உதவி அளித்தார்கள். 1990 ஆம் ஆண்டு, இந்த மண்டல், கொங்கன் வெள்ள நிவாரண நிதிக்கு உதவியது. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ‘ஆர்மி சென்ட்ரல் வெல்ஃபேர் நிதி’ என்று முதல் முதலில் வழங்கியது இந்த லால்பக்சா மண்டல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுள் நேரிடையாக உதவாமல், மனித உருவில் மற்றவர் உள்ளங்களில் பக்தியோடு, மனித நேயத்தோடு நடக்க அருள் பாலிக்கிறாஇ ஏன்பதில் சந்தேகமே இல்லை…

கணபதி பப்பா மோரியா…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *