தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, பள்ளிக்கல்வித்துறையில் சில திட்டங்களில் குறைகள் இருக்கிறது என்றும் அவற்றை சரி செய்ய வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தரும் கல்வி உபகரணங்கள், டெண்டர் உள்ளிட்டவைகளில் ஊழல் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஊழல், முறைகேட்டை தடுத்து நிறுத்தினாலே கல்வி கனவு நனவாகிவிடும் என்றார்.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட்டே ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

