வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

Advertisements

மனிதர்கள் முதுமை அடையும்போது, உடலின் தசைகள் மெதுவாக வலிமையிழக்கத் தொடங்குகின்றன. இந்த நிலைமைக்கு மருத்துவத்தில் ‘சர்கோபீனியா’ என்ற பெயர் உள்ளது. தசை குறைபாடு ஏற்படுவதால் நடையில் இடைச்செருக்கு, எழும்ப ஓய்வு தேவைப்படும் சூழ்நிலை, செயல்விளைவுகள் போன்றவை ஏற்படுகின்றன.இது வயதினால் மட்டுமல்ல; உடற்பயிற்சியின்மை, மது மற்றும் புகை பழக்கம், புரதச்சத்து மற்றும் வைட்டமின் டி குறைபாடும் முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.

இந்த ‘சர்கோபீனியா என்ற நோயானது பல வடிவங்களில் உருப்பெற்று வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகள் மற்றும் தசைகள் தான் . வயதானவர்கள் எப்போதும் அமராமல், சற்று நடக்கவும், நிற்க வேண்டும். ஒரு வாரம் படுக்கையில் இருந்தால், 5% வரை தசை இழப்பு ஏற்படும். அதை மீண்டும் மீட்டெடுக்க மிகவும் கடினம்.இதைவிட ஆபத்தானது என்னவெனில் தசை இழப்பால் சர்க்கரை அளவு கூடும், நடையிலும் தடை ஏற்படும்.

நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவை தசையை வலிமையாக்கும் சிறந்த வழிகள்.60-70 வயதினருள் 13% பேர், 80-க்கு மேல் உள்ளவர்களில் பாதி பேர் வரை இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால், தினமும் சிறிய பயிற்சிகளுடன் உடலை இயக்குங்கள். வயதானது, தசை பலவீனம், சகிப்புத்தன்மை இழப்பு மற்றும் நடைபயிற்சி அல்லது பொருட்களை தூக்குவது போன்ற அன்றாட பணிகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை அறிகுறிகளாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *