வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு காரணம் இதுதான் -பொள்ளாச்சி ஜெயராமன்.!

வாக்கு சதவீதம் அதிகரிப்பு என்பது தற்போதைய ஆட்சி மீதான மக்களின் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, மே 4 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என்ற திமுகவினரின் நம்பிக்கை குறித்தக் கேள்விக்குப் பதிலளித்தவர், 2011 ஆம் ஆண்டு அவர்கள் இப்படித்தான் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட அவர்களால் பெற முடியவில்லை என்றும் அதே நிலைமைதான் இப்போதும் ஏற்படும் என்றும் விமர்சித்தார்.

மேலும், வாக்கு சதவீதம் அதிகரிப்பு என்பது தற்போதைய ஆட்சி மீதான மக்களின் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *