
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை இயக்குநர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேல் காசா நகரம் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் காசாவில் இந்தோனேசிய மருத்துவமனையை நடத்தி வந்த அதன் இயக்குநர் மர்வன் சுல்தான் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை இயக்குநரின் வீட்டில் தாக்குதல் நடத்தியதில் அவரும் அவர் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாகக் கவலை தெரிவித்துள்ளது. மருத்துவர் மர்வன் சுல்தான் மருத்துவத் துறையில் நீண்ட நெடிய அனுபவம் உடையவர் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சகம் மருத்துவரையும், மருத்துவக் கட்டமைப்புகளையும் தாக்கி இஸ்ரேல் கொடிய குற்றமிழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
