ஐஸ்கிரீம் & குளிர்பான ஆலைகளில் அதிரடி சோதனை.. உசார் மக்களே..!

தர்மபுரியில் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிலையங்களை கண்காணித்து உணவு பாதுகாப்பு துறை குழுவினர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கோடைவெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிலையங்களை கண்காணித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து தர்மபுரியில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரி சுற்றியுள்ள பகுதிகளான ஏமகுட்டியூர், உங்காரனள்ளி, குமாரசாமிபேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐஸ், ஐஸ்கிரீம் தயாரிப்பு, விநியோக, விற்பனை நிலையங்கள் மற்றும் பழகடைகள், பழரசங்கள் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.

மேலும் உபயோகப்படும் மூலப்பொருட்கள் தரமானதாகவும் உரிய காலாவதி தன்மை உடையதாக இருத்தல் அவசியம் எனவும் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் பராமரிக்க உரிய தலைஉறை, மேலங்கி அணிந்து பணியாற்றிட விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *